இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பெரியாரின் கொள்கை வாரிசான கலைஞரை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வருகை தந்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கும் காந்தியடிகளுக்குமான தொடர்பை கோபாலகிருஷ்ண காந்தி நன்கு அறிவார்.மதவெறியன் கோட்சேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது.அண்ணாவைப் போல கலைஞரும், காந்தியடிகள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார் .திராவிட இயக்கம் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் கோபாலகிருஷ்ண காந்தி.திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சித் துறைமுகம் என்றுக் குறிப்பிட்டார் கோபாலகிருஷ்ண காந்தி. மகாத்மா காந்தியின் பேரன் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம்,”என்றார்.
The post மகாத்மா காந்தியின் பேரன் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம்.: ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!! appeared first on Dinakaran.