சத்துணவு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம்

பெரம்பலூர், ஜூன். 2: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வேப்பூர் வட்ட பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் வெங்கடாஜலபதி தலைமை ஏற்றார். ஒன்றிய துணைத் தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மணிமேகலா, மாவட்ட செயலாளர் கொள ஞ்சி வாசு ஆகியோர் சிறப் புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, முன்னணி நிர்வாகிகள் செந்தாமரை, கலா, செ ல்வி, சகுந்தலா, தேன்மொ ழி, தவமணி,அஞ்சலை மற் றும் பல சத்துணவுஊழியர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளும் செயல்படுத்தும் போது, சத்துணவு திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் பொருள் வைப்பறையி லேயே காலை உணவு திட்ட த்தை செயல்படுத்தும் மகளிர்குழு ஊழியர்களும் பயன்படுத்துவதால்,சத்துணவு திட்டத்திற்குபயன்படுத்தும் பொருள்கள் காணாமல் போகும் சூழ்நிலையும் உரு வாகும். ஆகையால் சத்து ணவு ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளா குவார்கள்.

இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்து வதாக தமிழ்நாடு சத்துண வு ஊழியர் சங்க மாநில மையம் முடிவெடுத்துள்ள து. இப் போராட்டங்களில் அனைத்து சத்துணவு ஊழி யர்களும் பங்கேற்பது போ ன்றபல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பொருளாளர் ரெவனே ஸ்வரி நன்றி கூறினார்.

The post சத்துணவு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: