“கிரெயின்ஸ்” வலைதளத்தில் வசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம்

பெரம்பலூர், ஜூன் 2: பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளைப்பெற “கிரெயின்ஸ்” வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்ற நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற கிரெயி ன்ஸ் என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்க ளை பதிவேற்றம் செய்யும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை அலுவலர்களுடன் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்ததாவது:-
விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், புகைப்படம், வங்கி கணக்குப்புத்தகநகல், நிலப்பட்டா, அலைபேசி எண் ஆகிய ஆவணங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் ஜூன் மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து, கிரெயின்ஸ் வலை தளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.

இந்த சிறப்பு முகாம் குறித்த தகவல்கள் அனைத்து விவசாய பெருங்குடி மக்களிடமும் சென்று சேரும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மா வட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் கிரேன்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். க்கூட்டத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா, வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், வேளாண்மை அலுவலர் அனு அர்ச்சனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post “கிரெயின்ஸ்” வலைதளத்தில் வசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: