தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர்

வடலூர்: பாலியல் தொல்லை கொடுத்த கணவனை தனது தோழி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து மதுவில் விஷம் கலந்து தனது கணவனை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம், பொன்னையன்குப்பம் கோபாலகிருஷ்ணன் வயலில் நேற்று முன்தினம் (31ம்தேதி) காலை வேலைக்கு சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர், வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் ராஜசேகர் (34) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ராஜசேகரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜசேகருக்கு குடிப்பழக்கமும், வேறு பெண்களுடன் தகாத உறவுகளும் இருந்து உள்ளது. மேலும் மஞ்சுளாவின் விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக தனது கணவரிடம் மஞ்சுளா பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். ராஜசேகரின் செயல்பாடுகளை பிடிக்காமல் தாய் வீட்டில் இருந்து வந்த மஞ்சுளா தனது நெருங்கிய தோழியான தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினோதினியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இந்த சூழலில் வினோதினி கணவர் சசிகுமார் சிங்கபூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருடன் சிங்கப்பூரில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த மோகன் (32) என்ற நண்பரும் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மஞ்சுளா படும் கஷ்டத்தை சசிகுமாரிடம் வினோதினி கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து இவர்கள் 4 பேரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக கடந்த 27ம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து தொண்டமாநத்தத்தில் உள்ள வினோதி வீட்டிற்கு வரவைத்துள்ளனர். பின்னர் சசிக்குமார், மோகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மதுபாட்டிலில் விஷம் கலந்து த.பாளையம் கிராமம் அருகே உள்ள பொன்னையன்குப்பத்தில் கரும்பு தோட்டத்திற்கு ராஜசேகரை அழைத்துச் சென்று குடிக்க வைத்து உள்ளனர்.அதை குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகர் மனைவி மஞ்சுளா (32), சசிகுமார் (39), அவரது மனைவி வினோதினி (30), மோகன்(32) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர் appeared first on Dinakaran.

Related Stories: