ராணுவ வேலையும் போச்சு… வாழ்க்கையும் போச்சு… எஸ்ஐயுடன் எனது மனைவி வீடியோ காலில் பேசுகிறார்: குழந்தைகளை மீட்டு கொடுங்க; பெண் காவலரின் கணவர் எஸ்பியிடம் புகார்

வேலூர்: வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி வேலூரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக உள்ளார்.

இந்நிலையில் பிரபு நேற்று முன்தினம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான் ஆரம்பத்தில் ராணுவத்தில் பணி புரிந்தேன். திருமணத்திற்கு முன்பு எனது தோழி மூலம் எனது மனைவி அறிமுகமானார். செல்போனில் பேசி நாங்கள் முகம் பார்க்காமல் காதலித்தோம். கடந்த 2012ல் விடுமுறை எடுத்து ஊருக்கு வந்தபோது நேரில் பார்த்தேன். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டோம். காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். விடுமுறை முடிந்து நான் மீண்டும் ராணுவத்திற்கு சென்றுவிட்டேன்.

அப்போது ஒருநாள் எனது மனைவி எனக்கு போன் செய்து தனக்கு திருமணத்திற்கு முன்பே சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும், அவருடன் திருமணம் செய்யாமலேயே தம்பதி போல் வாழ்ந்ததாகவும், அதன்பின்னர் அவர் தன்னை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.

இதனை மறைத்து எனது மனைவி என்னுடன் பழகி திருமணம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்தேன். அதன்பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். அதை ஏற்று குடும்பம் நடத்தி வந்தேன். 2 குழந்தைகளை பெற்றோம். ராணுவ பணியில் இருந்தபோது என்னை அடிக்கடி வீட்டுக்கு வரும்படி கூறி எனது மனைவி மிரட்டினார். இதனால் வேறுவழியின்றி விடுமுறை எடுத்ததால் என்னை ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள்.

அதன்பிறகு தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக எனது மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது. அடிக்கடி தன்னுடன் பணிபுரியும் எஸ்ஐ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார். இதை கேட்டதற்கு, எனது மகளிடம் என்னை பற்றி தவறாக கூறியுள்ளார். இதனால் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். மனைவியுடன் வாழ விரும்பவில்லை. எனவே எனது 2 குழந்தைகளை அவரிடம் இருந்து மீட்டுத்தரவேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

The post ராணுவ வேலையும் போச்சு… வாழ்க்கையும் போச்சு… எஸ்ஐயுடன் எனது மனைவி வீடியோ காலில் பேசுகிறார்: குழந்தைகளை மீட்டு கொடுங்க; பெண் காவலரின் கணவர் எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: