இசிஆர் சாலையில் பைக்குகள் மோதல்; 2 பேர் பலி: ஒருவர் கவலைக்கிடம்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (50), இவர் நேற்று காலை கோவளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றார். சென்னை பெருங்குடியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான ராகுல்(23) மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த ராகேஷ் (21) ஆகிய இருவரும் ஒரு பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், கல்பாக்கம் அடுத்த பெருந்துறவு என்ற இடத்தில் 2 பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில், 3 பேரும் இசிஆர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். முகமது இப்ராகிம், ராகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராகேஷை அங்கிருந்தவர்கள் மூட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த, கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகமது இப்ராகிம் மற்றும் ராகுல் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

The post இசிஆர் சாலையில் பைக்குகள் மோதல்; 2 பேர் பலி: ஒருவர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Related Stories: