உலகிலேயே முதன்முறையாக தெலங்கானாவில் உருவாகும் 3டி கோயில்

திருமலை: தெலங்கானா சித்திபேட்டை மாவட்டத்தில் புருகுபள்ளியில் உள்ள சார்விதா மெடோஸ் என்ற கேட்டட் கம்யூனிட்டி வில்லா குடியிருப்பில் 3,800 சதுர அடி பரப்பளவில் 3டி அமைப்பில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனமான அப்சுஜா இன்ப்ரா டெக் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 3டி அச்சிடப்பட்ட கோயில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த கோயில் 3டி கட்டிடக்கலை கண்டுபிடிப்புகளின் குறிப்பிடத்தக்க சாதனையை அடைய சிம்ப்ளிபோர்ஜ் கிரியேஷன் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு வருகிறது. 30 அடி உயரத்தில் 3,800 சதுர அடி பரப்பளவில் இந்த கோயில் அமைய உள்ளது. விநாயகர், சிவன், பார்வதியுடன் கூடிய மூன்று சன்னதியுடன் இந்த கோயில் கட்டப்படுகிறது. விரைவில் இந்த கோயிலில் திறக்கப்படும் என்று தெரிகிறது.

The post உலகிலேயே முதன்முறையாக தெலங்கானாவில் உருவாகும் 3டி கோயில் appeared first on Dinakaran.

Related Stories: