சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் மயமாகும் மின் மயானங்கள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மின் மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் முக்கியமாக சேவைகள் பல டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில்தான் 3 முக்கியமான துறைகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. குறிப்பாக, ரேஷன் கடைகளில் ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த முடியும்.

அதேபோல் மின்சார கட்டணம் ரூ.1000 அல்லது ரூ.2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.

இதேபோல், மெட்ரோ ரயிலிலும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. இதை ஒரு நாள் முழுக்க ஒரு முறை பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கு வழங்க முடியும். பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் கூட வரும் காலங்களில் இந்த டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது. இன்னொரு பக்கம் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள மின் மாயானங்களில் சடலங்களை எரிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது சாதாரண மயானங்கள், மின்சார மயானங்கள் உள்ளன. சென்னையில் பல இடங்களில் மின்சார மயானங்கள் உள்ளன. இங்கே சடலங்களை எரிக்க இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மருத்துவர் அளித்த சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். குற்றங்களை தவிர்ப்பதற்காக சென்ைன மாநகராட்சி இதுபோன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அதேநேரம் இதுபோன்ற பணிகளை செய்ய மயானங்களில் ஊழியர்கள் பலரும் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பணிகள் மாநகராட்சி சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும் கூட, மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக அதிகாரபூர்வமற்ற முறையில் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் பலர் மின்சார சுடுகாடுகளில் உடலை எரிக்க சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக சென்னையில் மயான சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல், மின்சார சுடுகாடுகளில் சடலங்களை எரிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வர உள்ளனர். மின் மயானத்தில் எரிக்கப்பட உள்ள நபரின் பெயர், அவரின் உறவினர் பெயர், அவர்களின் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு ஸ்லாட்டை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் மின்சார மயான சேவைகளை இலவசமாகப் பெற முடியும். அதோடு முறையற்ற மரணங்கள், லஞ்சங்கள் போன்றவற்றை கண்காணிக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள மாநகராட்சி மின் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சடலங்களை எரிக்க வரும் நபர்களிடம் விதிமீறி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பிரச்னைக்க தீர்வாக, சடலங்களை எரிக்க ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி விரைவில், அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் இலவசமாக மின் மயானங்களை பயன்படுத்த முடியும்,’’ என்றனர்.

The post சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் மயமாகும் மின் மயானங்கள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: