மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்: கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் டிவீட்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என்று கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சியினர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் டி.கே.சிவகுமார் டிவிட்டர் அளித்துள்ள விளக்கமாவது;

மேகதாதுவால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசனநீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழ்நாட்டு மக்கள் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. அவர்களை சகோதரர்களாக பார்க்கிறோம். அண்டை மாநிலங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக செயல்படுவோம். மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது அணையை கட்ட ரூ.1,000 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் செலவிடப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்: கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் டிவீட் appeared first on Dinakaran.

Related Stories: