முதுநிலை எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு: மதுரை டாக்டர் முதலிடம்

மதுரை: மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஹரிநாராயண், எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் டாக்டர் ஹரிநாராயண் (27). இவர், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் வென்றார்.

இதுகுறித்து டாக்டர் ஹரிநாராயண் கூறும்போது:
எம்பிபிஎஸ் படிப்பை கோவை கல்லூரியில் முடித்தேன். பிறகு சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்.எஸ் படித்தேன். மதுரையில் தனியார் மருத்துவமனையில் பணி செய்து கொண்டே கல்லீரல், குடல் அறுவை சிகிச்சை படிப்புக்கான ெடல்லி எய்ம்ஸ் நுழைவுத்தேர்வுக்கு (எம்.சி.ஹெச்) தயாரானேன். இதற்காக சுமார் 15 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். நுழைவுத்தேர்வில் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 20 பேருக்கு மட்டுமே இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது.

இதில் 100க்கு 64 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் டெல்லி எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தில் வென்றேன். இந்த படிப்பை முடித்து விட்டு மதுரையில் தொடர்ந்து டாக்டராக பணி செய்வேன். மதுரை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் மாணவரான எனது தந்தை டாக்டர் முருகன், தாயார் டாக்டர் லதா, மனைவி டாக்டர் அம்சநந்தினி உள்ளிட்டோரின் ஊக்கம், ஒத்துழைப்பு ஆகியவை என் படிப்பில், பணியில் முழு ஈடுபாட்டுடன் இருக்க உதவியது’’ என்றார்.

The post முதுநிலை எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு: மதுரை டாக்டர் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: