கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாக கூறி பணமோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மேற்குவங்கத்தில் ‘காலிகடர் காக்கு’ என்று அறியப்படும் சுஜய் கிருஷ்ணா பத்ராவை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர்.அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.