கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை 15ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்கிறார்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கிண்டி அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் 15ம் தேதி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு திறக்க உள்ளார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், கலைஞர் நினைவு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 230 கோடி மதிப்பீட்டில் 4.89 ஏக்கர் பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன், 1000 படுக்கைகளுடன் கிங் நிறுவன வளாகத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் 15ம் தேதி திறக்க உள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், மருத்துவமனை தனி அலுவலர் மருத்துவர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை 15ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்கிறார்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: