என்ன ஒரு அதிசயம்!: சிரித்த முகத்துடன் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்.. விழுந்து வணங்கி செல்லும் மக்கள்..!!

அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது. முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள்.

The post என்ன ஒரு அதிசயம்!: சிரித்த முகத்துடன் 4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்.. விழுந்து வணங்கி செல்லும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: