முசிறி புதிய பேருந்து நிலையத்தில் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

முசிறி, மே 31: திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் ஜான் ஸ்டான்லி சேவியர் தீர்மானங்களை வாசித்தார்.பின்னர் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளின் தேவைகள் குறித்து பேசினர். அப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தால் குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்படுகிறது, மேலும் தண்ணீர் குறைவாக வரும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் மின்சார பற்றாக்குறை இருப்பதாலும் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கொடுக்க இயலவில்லை.

ஆகவே நீரேற்று நிலையத்திலிருந்து பாலம் அமைத்து அதன் மூலம் குடிநீர் குழாய்கள் கொண்டு வர வேண்டும். புதிய பேருந்து நிலையத்தின் மேற்கூறையில் தட்டு ஓடுகள் பெயர்ந்து உள்ளதால் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சிமெண்ட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது. எனவே புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், பொது மக்களுக்கு அடிபடை வசதிகள் செய்து தர வேண்டும், கீழ சந்தப்பாளையம் பகுதியில் வடிகால்வசதி , சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் புதிதாக பதவியேற்ற பணி மேற்பார்வையாளர் இளநிலை உதவியாளர் வருவாய் உதவியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்திற்கு வந்த அனைவரையும் சுகாதார மேற்பார்வையாளர் சையத் பீர் வரவேற்றார். களப்பணியாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விமான நிலையத்தில்

The post முசிறி புதிய பேருந்து நிலையத்தில் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: