மூதாட்டி வங்கி கணக்கிலிருந்து ₹40,000 அபேஸ்: ஒருவர் கைது

தண்டையார்பேட்டை,: பிராட்வே பகுதியில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து ₹40 ஆயிரம் திருடப்பட்டது. இதுதொடர்பாக, ஒருவரை கைது செய்து எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிராட்வே தாத்தா முத்தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (64). இவர் கடந்த 28ம் தேதி பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு டெலிவரி செய்யப்பட்டதாக தனலட்சுமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உணவு அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால் அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய ஒருவர் தங்களது நிறுவன செயலியை பதிவிறக்கம் செய்து, அதை ஸ்கேன் செய்தால் மீண்டும் உணவுக்கான பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளார். அதன்படி தனலட்சுமியும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்கேன் செய்தார். அப்போது அவருடைய வங்கி கணக்கிலிருந்து ₹40 ஆயிரம் திருடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி வங்கி கணக்கிலிருந்து ₹40,000 அபேஸ்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: