முகத்தில் மிளகு பொடி தூவி நகை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை

களக்காடு: நகை வியாபாரி மீது மிளகு பொடி தூவி, இரும்பு கம்பியால் தாக்கி ரூ.1.5 கோடி ரூபாயை முகமூடி நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுனைச் சேர்ந்தவர் சுஷாந்த் (40). டவுனில் நகை தர நிறுவனம், நகை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் கடை ஊழியரான விஷாலுடன் புறப்பட்டுச் சென்றார். நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் கார் வரும் போது திடீரென பின்னால் கார்களில் வந்த முகமூடி அணிந்திருந்த கும்பல் சுஷாந்தின் கார் மீது மோதிவழிமறித்து அவரை தாக்கி ஸ்பிரே மூலம் அவரது முகத்தில் மிளகு பொடியை தூவினர்.

பின்னர் சுஷாந்த் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து சீட்டிற்கு அடியில் சிறிய பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்ட ரூ.1.5 கோடியை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் விரட்டியதால், சுஷாந்தை மட்டும் அங்கேயே இறக்கி விட்டு அவரது கார் உட்பட 3 கார்களில் தப்பிச் சென்றனர். பின்னர், சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த ரூ.1.5 கோடி பணக்கட்டுகளை எடுத்து கொண்டு தப்பினர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் வழக்குப்பதிந்து சுஷாந்த்துடன் காரில் சென்ற கடை ஊழியரான விஷால் உள்ளிட்ட மேலும் சில ஊழியர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முகத்தில் மிளகு பொடி தூவி நகை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: