தாளவாடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் காப்பகத்தில் ஆதரவற்ற 150 பேருக்கு அறுசுவை மதிய உணவு வழங்கல்

 

சத்தியமங்கலம், மே 31: தாளவாடி ஒன்றிய திமுக சார்பில் காப்பகத்தில் வசிக்கும் ஆதரவற்ற 150 பேருக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ. ராசா மனைவி பரமேஸ்வரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாளவாடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சூசையபுரத்தில் உள்ள நாசரேத் காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவண்ணா தலைமையில் பரமேஸ்வரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனநல காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற 150 நபர்களுக்கு திமுக சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தூர், துணைச் செயலாளர் பிரகாஷ், விவசாய அணி லிங்கண்ணா, தொழிற்சங்க நிர்வாகி முருகானந்தம், மாணவர் அணி அருண்குமார், நிர்வாகி பொன்னுசாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post தாளவாடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் காப்பகத்தில் ஆதரவற்ற 150 பேருக்கு அறுசுவை மதிய உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: