புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு பிரதமர் மோடிக்கு வணிகர் சங்கம் வாழ்த்து

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் நெடிய அரசியல் பயணத்தில் மாநில முதல்வராக, தேசத்தின் பிரதமராக, ஜி20 தலைவராக என பல்வேறு நிலைகளில் தங்களின் நிறைவான பங்களிப்பை அளித்து வந்திருக்கிறீர்கள். அதன் தொடர்ச்சியாக இன்று நீங்கள் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற நமது பாரம்பரியம், கலாசாரம் மனிதநேயம், மாண்பு என்கிற எதிலும் குறைவில்லாது ஒவ்வொரு செயலையும் மிக துல்லியமாகவும், தொலைநோக்குடனும் கணித்து தங்களின் ஆளுமையில் சிறிதும் குறைவின்றி, மிகக் குறுகிய காலத்தில் நாட்டிற்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நிறைவு செய்து, நாட்டிற்காக அர்ப்பணித்திருப்பது தேசிய வரலாற்றில் ஒரு மைல் கல். தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்திய தேசத்திற்காகவே அர்ப்பணிப்புடன் கூடியது என்பதை நீங்கள் முத்திரை பதித்திருக்கிறீர்கள். இந்திய வரலாற்றின் சிறப்பு மிகுந்த இந்நன்னாளில், தமிழக கலாசாரத்தையும் சேர்த்து பெருமைப்படுத்திய தங்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன், தங்களின் சேவை இந்திய தேசத்துக்கு தொடர்ந்திட இறைவனை பிரார்த்திருக்கிறேன். இவ்வாறு விக்கிரமராஜா கூறியுள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு பிரதமர் மோடிக்கு வணிகர் சங்கம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: