பால் உப பொருட்களான ஐஸ்கிரீம் இனிப்புகளை தனி வாகனங்கள் மூலம் விற்கவேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்

சென்னை: பால் உப பொருட்களான ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு வகைகளை தனி வாகனங்கள் மூலம் விற்பனைக்கு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம் மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: பால் பொருட்கள் உற்பத்தியின்போது ஏற்படும் இழப்பீடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இழப்பு நிர்ணயம் செய்தல். தர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல். பால் மற்றும் பால் உபபொருட்களில் சுவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்படும். பால் உற்பத்தி அதிகரிக்கும் போதும், குறையும் போதும் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட வரைவு தயாரித்தல், உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் உப பொருட்கள் நுகர்வோருக்கு அனுப்பி வைக்கும் போதும், போக்குவரத்தின் போதும் தரம் குறையாமல் உரிய நேரத்தில் நுகர்வோருக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். நொதியூட்டப்பட்ட பால் உப பொருட்களான ஐஸ் கிரீம் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவற்றை தனி வாகனங்கள் மூலம் விற்பனைக்கு விநியோகிக்க வேண்டும் என்று பேசினார்.

The post பால் உப பொருட்களான ஐஸ்கிரீம் இனிப்புகளை தனி வாகனங்கள் மூலம் விற்கவேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: