200 கிலோ அலுமினியம் திருடிய 2 பேர் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் மர்ம நபர்கள் மதில் சுவரை தாண்டி தொழிற்சாலையின் உள்ளே புகுந்து, அங்குள்ள அலுமினிய குழாய்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தொழிற்சாலையின் மேலாளர் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், எண்ணூர் கமலம்மாள் நகரைச் சேர்ந்த குணசேகர்(42), வஉசி நகரை சேர்ந்த அறிவழகன்(36) ஆகிய இருவரும் தொழிற்சாலையின் உள்ளே புகுந்து அலுமினிய குழாய்களை திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 200 கிலோ அலுமினிய பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 200 கிலோ அலுமினியம் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: