நண்பன் மீது இருந்த கோபத்தில் நாயை கொன்ற 3 வாலிபர்கள் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் புவனேஸ்வர்(25). டிரைவர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் சங்கர்(23), பிரபாகரன்(22), ரோகித்(22). இவர்கள் 4 பேரும் கடந்த 26ம் தேதி அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வர், செல்போனில் பேசி கொண்டிருந்தார். உடனே மற்ற 3 பேரும், யாரிடம் செல்போனில் பேசுகிறாய், போன் இணைப்பை துண்டி என கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 3 பேரும் ஆத்திரமடைந்தனர். அதில், மிகுந்த கோபத்தில் இருந்த சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரின் காலில் வெட்டியதில் ரத்தம் பீறிட்டது.

இதனை அடுத்து, பிரபாகரன் மற்றும் ரோகித் இணைந்து சங்கர் மற்றும் புவனேஸ்வரனையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து சென்றுவிட்டனர். புவனேஸ்வர் வீட்டிற்கு காலில் கட்டுடன் சென்றதை பார்த்து அவரது தந்தை நடந்தது என்ன என கேட்டுள்ளார். நடந்தவற்றை புவனேஸ்வர் கூற, பெற்றோர் ஆத்திரமடைந்தனர். உடனே சங்கர் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம், நடந்ததைக் கூறி சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து, சங்கரை அவனது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், நேற்றுமுன்தினம் தனது நண்பர்களான பிரபாகரன், ரோகித் ஆகியோருடன் புவனேஸ்வர் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது, புவனேஸ்வர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டு வாசலில் கட்டி போட்டிருந்த நாய் இவர்களை பார்த்ததும் தொடர்ந்து விடாமல் குரைத்து கொண்டிருந்தது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக நாயை ெவட்டினர். சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியானது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் ராம்மூர்த்தி நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post நண்பன் மீது இருந்த கோபத்தில் நாயை கொன்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: