மனக்குழப்பம் தீர மாரியம்மன் வழிபாடு..!!

ஒரு மனிதனுக்கு மன குழப்பம் வருவது இயற்கையான ஒரு விஷயம் தான். சந்திரன சரி செய்து கொள்ள மாரியம்மன் வழிபாடு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும். வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். நம்மளால முடிந்த பொருட்களும் மாரியம்மன் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம்.

அபிஷேகத்திற்கு பால், இளநீர், தேன் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அலங்காரம் செய்ய அழகான புடவையையுமே வாங்கி கொடுக்கலாம். சிவப்பு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது கூடுதல் பலனையும் சிறப்பையும் நமக்கு கொடுக்கும். அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்வதற்காக குங்குமம் வாங்கி கொடுக்கலாம் பெரும்பாலும் நிறைய அம்மன் கோவில்களில் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

பூஜைக்கு உங்களால் முடிந்த காணிக்கையும், பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம். பௌர்ணமி பூஜையில் உங்களால் முடிந்த நைவேதியத்தை செய்து கொண்டு போய் அம்பாள் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து நைவேத்தியத்த உங்கள் கையால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதான செய்யலாம். இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவதால் மன சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அம்மன் கோவிலுக்கு செய்யக்கூடிய பிரசாதத்தை கூடுமானவரை பச்சரிசியில் செய்வது நமக்கு கூடுதல் சிறப்பு கொடுக்கும். ஆண்கள் மனக்கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவராமல் கோவில்களெல்லாம் முடி இறக்கம் செய்யலாம் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் எல்லாம் வேண்டுதலும் வைத்து மொட்டை அடிப்பார்கள்.

அதனைப்போலவே ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று உங்களுடைய முடி காணிக்கையாக கொடுக்கும் போது மனசு ஒரு சில நாட்களில் தெளிவு பெறும். இது ஆண்களுக்கு மட்டும், பெண்கள் அம்மன் கோவிலுக்கு சென்று பூ முடி கொடுக்கலாம். இவ்வாறு அம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபாடு செய்தோம் எனில் மன குழப்பம் முழுவதும் நீங்கிவிடும்.

The post மனக்குழப்பம் தீர மாரியம்மன் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: