மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமனம்!

மும்பை: மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

அதில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் முன்னிலையில் மராட்டிய அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது. இதில், சச்சின் தெண்டுல்கர் மற்றும் மருத்துவ கல்வி துறையும் இணைந்து கையெழுத்திட்டன. இதன்படி, புன்னகைப்பது, சுவைப்பது உள்ளிட்ட விசயங்களுக்கான வாய்வழி சுகாதாரங்களை ஊக்குவிக்கும் வகையில் தூதராக சச்சின் தெண்டுல்கர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதற்கான தூதராக அவர் இருப்பார் என்று கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து அவர் இதற்கு ஒப்பு கொண்டு உள்ளார் என பட்னாவிஸ் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில், சுகாதாரமிக்க நாட்டுக்காக, கை சுகாதாரம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை சுட்டி காட்டும் நோக்கத்தில் அதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாவ்லான் ஸ்வஸ்த் இந்திய திட்டத்திற்காக முதன்முதலில், கை தூதராக சச்சின் தெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

The post மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: