இருவகை அடித்தளங்கள்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

இயேசு “ஆகவே நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக்கேட்டு இவற்றின்படி செயல்படுகிற யாவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்” “நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தம் வீட்டைக்கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்”

இப்பகுதியில் நம் அருள்நாதர் இருவகையான அடித்தளங்களை குறிப்பிடுகின்றார். மழைப்பொழிவில் (மத்தேயு நற்செய்தி நூல் பிரிவு 5 முதல் 7 வரை) நம் அருள்நாதர் ஒரு சமத்துவ சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கும் சித்தாந்தங்களை போதிக்கிறார். தம் சொந்த மதமான யூத மதத்தின் மறைநூல் அறிஞர்கள் மக்களை ஒன்றுபடுத்துவதில் தன் முனைப்பை காட்டுவதற்கு பதிலாக அவர்களை பிளவு படுத்துவதிலும் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவர்களை பிரித்து வைப்பதிலும் முனைப்பைக் காட்டினர்.

மலைப்பொழிவில் சொல்லப்படுகின்ற மக்கள் கூட்டம் அல்லது திரளான ஜனங்கள் என்பவர்கள் யூத மதவாதிகளால் சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டவர்கள். ஏசாயா தீர்க்கன் உரைப்பது போல (56:7) எருசலேம் ஆலயத்தை ‘என் இல்லம்’ என்று நம் அருள் நாதர் இயேசு குறிப்பிடுவதுமன்றி மேலும், அது மக்களினங்கள் அனைத்திற்கும் கூறிய இறைவேண்டலில் வீடு என குறிப்பிடுகிறார். அது மக்களினங்கள் அனைத்திற்குமுரிய இறைவேண்டலின் வீடு என குறிப்பிடுகிறார்.

ஆனால் யூத மதவாதிகள் எருசலேம் ஆலயத்தை அனைத்து மக்களினங்களின் வீடாக வைத்துக்கொள்ளவில்லை. ரோம அரசில் பணிபுரிபவர்கள் குறிப்பாக வரி வசூல் செய்பவர்கள், ஏழைகள், பணம் இல்லாத காரணத்தினால்தான் ‘பாவநிவாரண பலி’ செலுத்தி பாவத்தை நிவர்த்தி செய்யாததினால் யூத மதவாதிகளால் ஏழைகளை பாவிகள் என்று அழைக்கப்பட்டவர்கள், பெண்கள், சிறுவர்கள், யூதரல்லாதோர், நோயாளர் ஆகியோர் எருசலேம் ஆலயத்தில் அனுமதிக்கப்படவில்லை.

எருசலேம் ஆலயம் என்பது யூத சமுதாயத்தில் ஒரு அதிகார பீடம். எருசலேம் ஆலயத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களைவிட பிரித்து வைக்கப்பட்டவர்கள்தான் இந்த திரளான ஜனங்கள் இயேசுவின் மலைப்பொழிவில் குறிப்பாக சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் சித்தாந்தங்களை போதிக்கிறார்.

இந்த சமத்துவ சமுதாய சித்தாந்தத்தின் கருப்பொருளை இயேசுநாதரின் வழிவந்த பவுல் அடிகளார் கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும், பெண் என்றும் இல்லை யூதன் என்றும், கிரேக்கர் என்றும் இல்லை, உயர்ந்தவர் என்றும், தாழ்ந்தவர் என்றும் இல்லை. நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கின்றோம் என்று சொல்வதை பார்க்கின்றோம்.

அதாவது கிறிஸ்து சொல்லுகிற சமத்துவ சமுதாயக் கட்டமைப்பில் சாதிப்பாகுபாடு, பாலினப்பாகுபாடு, வர்க்க பாகுபாடு (No Caste Discrimination, No Class Discrimination, NO Gender Discrimination) இல்லை. ஆகவே, நம் அருள்நாதர் இயேசு சொல்லும் சமத்துவ சமுதாய சித்தாந்தங்களை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படுகிற சமூகம் பாறை மீது கட்டப்பட்ட வீடு போன்றது.

எந்த சூழலிலும் அது விழாது மாறாக சமத்துவ சமுதாய சித்தாந்தத்திற்கு எதிரான சித்தாந்தங்களை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படுகிற சமூகம் மணல் மீது கட்டப்பட்ட வீடு போன்றது. அது எந்த சூழலிலும் விழுந்துவிடும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post இருவகை அடித்தளங்கள் appeared first on Dinakaran.

Related Stories: