ஆன்மிகம் பிட்ஸ்: முருகன் அஷ்டமூர்த்தம்

வேதாளம்: 18 கணங்களுள் ஒன்று. ஆந்தை முகம் கொண்டவர்கள் உருத்திரருக்கு ஆயுதமாகவும், முருகன், பைரவர்கள் படையாகவும், காளிக்கு கொடியாகவும், பைரவர் கையிலும் உள்ளன. திருக்கழுகுன்றம், திருவெண்காடு தலத்தில் அகோரமூர்த்தி வலது கரத்தில் வேதாளம் ஆயுதமாக உள்ளது. வழிபட்டு பேறு பெற்றது திருவிடைமருதூர்.

செந்தில்நந்தி: திருச்செந்தூர் முருகன் முன்புறம் மயில் சிலை ஒட்டி நந்தி உள்ளார். மூலவருக்கு இடப்புறம் உள்ள மாடக்குழி ஜெகந்நாதர் என்னும் சிவலிங்கம் உள்ளதால் நந்தி உள்ளது.

முருகன் அஷ்டமூர்த்தம்: முருகப்பெருமான் தந்தையைப் போலவே அஷ்டமூர்த்தங்களாக விளங்கி உலகிற்கு அருள்பாலிக்கின்றார். 1) கார்த்திகேயன் (சூரியன்), 2) விசாகன் (சந்திரன்), 3) குகன் (ஆன்மா), 4) அசுராந்தகன் (நிலம்), 5) சேனானி (நீர்), 6) ஷண்முகன் (தீ), 7) மயுரவாகனன் (காற்று), 8) சக்திபாணி (ஆகாயம்).

சேவலும் பிரணமும்: முருகனுக்கு அமையும் திருவுருவில் மட்டும்தான் வலதுபக்கம் வேலும், இடது கை பக்கம் கோழிக்கொடி ஏந்தியவனாக காட்டப்படுகிறான். சிவனுக்கு முருகன் பிரணவத்தின் விளக்கத்தை இருசெவிகளிலும் கூறினான். அதுபோல கொடியில் அமையும் கோழியானது முருகனின் திருச்செவியை நோக்கி நின்றவாறு பிரணவத்தை ஓயாது கூவிக்கொண்டிருக்கிறது.

தொகுப்பு- அருள்ஜோதி.

The post ஆன்மிகம் பிட்ஸ்: முருகன் அஷ்டமூர்த்தம் appeared first on Dinakaran.

Related Stories: