ஆலங்குடி தொகுதியில் 2 புதிய டெண்டர்களுக்கு ஒப்புதல்: ப.சிதம்பரம் பேட்டி

புதுக்கோட்டை: ஆலங்குடி தொகுதியில் உள்ள கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் நூலகம் அமைப்பது தொடர்பான டெண்டருக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post ஆலங்குடி தொகுதியில் 2 புதிய டெண்டர்களுக்கு ஒப்புதல்: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: