இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு தொற்று உறுதி..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,054லிருந்து 4,49,90,278ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,866லிருந்து 5,31,867ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 429 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,53,908ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,709லிருந்து 4,503ஆக குறைந்தது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,695 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 220,67,09,286 ஆக அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு தொற்று உறுதி..! appeared first on Dinakaran.

Related Stories: