காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜீப் திருட்டு

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். இன்ஸ்ெபக்டரின் போலீஸ் ஜீப் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பாரா போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 5.30 மணிக்கு டிரைவர் ஜீப்பை எடுக்க வந்தார். ஆனால் ஜீப்பை காணவில்லை. வேறு டிரைவரை பயன்படுத்தி ஜீப் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி அவர் இன்ஸ்பெக்டரிடம் போன் செய்து கேட்டுள்ளார்.

சிசிடிவி கேமராவை பார்த்த போது காலை 2.30 மணியளவில் ஒரு வாலிபர் காவல் நிலைத்திற்கு டிப்டாப்பாக வந்து உள்ளே இருந்த சாவியை எடுத்து போலீஸ் ஜீப்பை ஸ்டார்ட் செய்து எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. ஜீப் மார்த்தாண்டம் சாலையில் சென்றது. இதையடுத்து திப்பிரமலை பகுதியில் அனாதையாக நின்றிருந்த ேபாலீஸ் ஜீப்பை இன்ஸ்பெக்டர் காவல்நிலையம் கொண்டு வந்தார். விசாரணையில் திப்பிரமலையை சேர்ந்த ஒரு வாலிபர் ஜீப்பை எடுத்து சென்றது தெரிய வந்தது. மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் போலீசார் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

The post காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜீப் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: