யுபிஎஸ்சி மாணவிகளுக்கு குறி தனியார் நிறுவன பெண் மேலாளரை பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி: திமுக ஆட்சியில் தைரியமாக பெண் புகார்

* மேலும் 6 பெண்களுடன் பழகி ஏமாற்றியது அம்பலம்
* அதிமுக ஆட்சியில் புகார் அளித்தால் பயனில்லை என கருத்து

சென்னை: தனியார் நிறுவன பெண்ணை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி, 6க்கும் மேற்பட்ட மாணவிகளையும் ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால் தற்போது தாமதமாக புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் டம்மியான பதவியில் ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார். நேரடி ஐபிஎஸ் அதிகாரியான அவர், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். பகலில் வேலை, உடற்பயிற்சி என்று இருப்பவர், இரவில் மது, மங்கை என்று மாறிவிடுவார். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் பெங்களூரைச் சேர்ந்த ஒரு அழகான டாக்டருடன் திருமணம் நடந்தது. திருமண பரிசாக பெங்களூரில் ரூ.10 கோடியில் வீடும் வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் திருமண பந்தம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். வழக்கம்போல, மது, மங்கை என்று சுற்ற ஆரம்பித்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே மோதல் இருந்தது. ஒரு கட்டத்தில் இவரது அடியை தாங்க முடியாமல் மனைவி பெற்றோர் வீட்டுக்கே சென்று விட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கடற்கரையை பாதுகாக்கும் பிரிவில் பணியாற்றினார். அப்போது வேலை குறைவு. இதனால் எப்போதும் வாட்ஸ் அப், இன்ஸ்டராகிராம் என சமூக வலை தளங்களிலேயே மூழ்கியிருப்பார். அப்போதுதான், இவரது இன்ஸ்டாகிராமிற்கு வடசென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலோ கொடுத்தார். தன் பதிவாக், ஒரு செல்ல நாய் குறித்த பதிவை இன்ஸ்ட்ராகிராமில் ஐபிஎஸ் அதிகாரி பதிவிட்டார்.

இதை தன்னுடைய பக்கத்தில் அந்தப் பெண் பகிர்ந்தார். இதைப் பார்த்த அதிகாரி, அந்த பெண்ணுக்கு ஹாய் என்று மெசேஜ் கொடுத்தார். ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரும் பதிலுக்கு ஹாய் சொன்னார். உடனே அதிகாரி தனது வலையை விரித்தார். நீங்கள் என்ன யுபிஎஸ்சி தேர்வு எழுதுகிறீர்களா என்று கேட்டுள்ளார். இல்லை, தனியார் நிறுவனத்தில் மேனேஜராக உள்ளேன் என்றதும், பின்னர் நைசாக பேச்சை வளர்த்துள்ளார். அவரது செல்போன் எண்ணை வாங்கி பேச ஆரம்பித்தார். இந்த சம்பவம் நடந்தது எல்லாம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம். பின்னர் ஒரு நாள் ஓட்டலுக்கு சாப்பிட போகலாமா என்று கூறி, அவரை மாமல்லபுரம் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது தான் மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாகவும், உன்னை காதலிக்கிறேன். பின்னர் டைவர்ஸ் கிடைத்தவுடன் உன்னை திருமணம் செய்கிறேன் என்று கதை விட்டுள்ளார். அதன்பின்னர் அந்த பெண்ணுக்கு கையில் முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தார். திடீரென ஒருநாள் அண்ணாநகரில் சாய்பாபா கோயிலுக்கு போகலாமா என்று கூப்பிட்டுள்ளார். அவரும் சரி என்று சென்றபோது, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முடித்ததும், அருகில்தான் நண்பரின் வீடு உள்ளது என்று கூறி ஒரே ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தனி அறையில் இருந்தபோது நான்தான் உன்னை திருமணம் செய்யப்போகிறேனே என்று கூறி பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறை அறை எடுத்து தங்கும்போது தன்னுடைய பெயரிலேயே அறை எடுத்துள்ளார். அதற்கு ஆதார் அட்டையை கொடுத்துள்ளார். அதன்பின்னர் ஒரு நாள் தனது பேஸ்புக் தளத்தில் மனைவியுடன் இருக்கும் ஒரு படத்தை வௌியிட்டுள்ளார். இதைப் பார்த்த காதலி, மனைவியுடன் சண்டை என்றீர்கள். இந்தப் படம் எப்படி வந்தது என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். அதன்பின்னர் அந்தப் பெண்ணை பார்ப்பதை தவிர்த்துள்ளார். அதன்பின்னர்தான் தெரிந்தது, இவர், இதுபோல யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதுபோல பேசி தன் வலையில் வீழ்த்தியுள்ளார் என்பது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட வடசென்னையைச் சேர்ந்த பெண், இது குறித்து சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு புகார் கொடுத்தார். அவரோ, இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஏடிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் இயங்கும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆதாரங்களை அப்படியே விட்டு விட்டுத்தான் தவறு செய்துள்ளார். தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் செய்தாரா அல்லது விவரம் தெரியாமல் செய்தாரா என்று போலீசாரே சந்தேகிக்கும் அளவுக்கு அவரது செயல்பாடு இருந்துள்ளது. இதனால் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆவணங்களை தயாரித்த போலீசார், இது குறித்து டிஜிபிக்கு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையைத் தொடர்ந்து, அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்காக உள்துறைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

தற்போது அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு ஒரு பெண் எஸ்ஐயுடன் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்தபோது யாரும் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனால், ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக அவரது மனைவியே சிபிசிஐடி போலீசில் புகார் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post யுபிஎஸ்சி மாணவிகளுக்கு குறி தனியார் நிறுவன பெண் மேலாளரை பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி: திமுக ஆட்சியில் தைரியமாக பெண் புகார் appeared first on Dinakaran.

Related Stories: