ஹெல்த்தி ரெசிபி காட்டுயானம் சூப்

தேவையானவை :

காட்டுயானம் அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
பூண்டு – 1, தக்காளி – 1,
கேரட் – 1, பீன்ஸ் – 3,
பெப்பர் பவுடர் – 1 டீஸ்பூன்,
சீரகம் – சிறிதளவு,
நெய் – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் காட்டுயானம் அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி உரித்த பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி சிறிது சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து, அரைத்த தக்காளி கலவையை சேர்த்து கேரட், பீன்ஸ் நறுக்கி அதில் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். இப்பொழுது கரைத்த காட்டுயானம் மாவை சேர்க்கவும். உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும். கொதிக்க விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும்.

The post ஹெல்த்தி ரெசிபி காட்டுயானம் சூப் appeared first on Dinakaran.