மயிலாப்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது!

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கென்யா நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (28.05.2023), மதியம், மயிலாப்பூர், சர்.சி.வி ராமன் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கண்காணித்தபோது, அங்கு வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி தங்கும் விடுதியில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய தங்கும் விடுதியின் பராமரிப்பாளர் 1. கண்ணன், வ/32, த/பெ.முருகன், அருந்ததியர் தெரு, சிவதாசபுரம், சேலம் மாவட்டம் மற்றும் தங்கும் விடுதியின் உரிமையாளர் 2. சரவணராஜ், வ/43, த/பெ.பரஞ்சோதி, மார்கோசா தெரு, ஆலந்தூர், சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த கென்யா நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post மயிலாப்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது! appeared first on Dinakaran.

Related Stories: