கலைஞர் நூற்றாண்டு விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவி: ஆலந்தூர் தெற்கு திமுக தீர்மானம்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நங்கநல்லூரில் தெற்கு பகுதி திமுக செயலாளரும் ஆலந்தூர் மண்டலக்குழு தலைவருமான என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அவை தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், நிர்வாகிகள், சாலமோன் ரமேஷ், பாபு முன்னிலை வகித்தனர். இதில் பகுதி செயலாளர் என்.சந்திரன் பேசும்போது “கலைஞர் நூற்றாண்டு விழாவினை அனைத்து வார்டுகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கியும் விளையாட்டு போட்டி,கோல போட்டி போன்றவற்றை நடத்தியும் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில், வட்ட செயலாளர்கள் யேசுதாஸ் உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன் சரவணா, மாவட்ட பிரதிநிதிகள் வெள்ளைச்சாமி, அபிஷேக், ஜெயக்குமார், ரமணா, வேல்முருகன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், கேபிள் ராஜா, பிரான்சிஸ், சதீஷ், கவுன்சிலர் தேவி ஏசுதாஸ், பாண்டிச்செல்வி, விஜயலட்சுமி, அமராவதி சாந்தி, சந்தியா வளர்மதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவி: ஆலந்தூர் தெற்கு திமுக தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: