குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைந்து நடவடிக்கை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், குலசேகரபட்டினம் சிறிய அளவிலான ராக்கெட்டை ஏவும் தளமாக செயல்பட வாய்ப்புள்ளது. வணிக ரீதியிலான தனியார் ராக்கெட் செலுத்துவதற்கு குலசேகரபட்டினம் எதிர்காலத்தில் பயன்படும். ராக்கெட் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் 99% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான பணிக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. கட்டுமான பணி தொடங்கினால் 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினனம் ஏவுதளம் செயல்பட தொடங்கும். விரைவில் சிறிய ராக்கெட் மற்றும் தனியார் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்படும். குலசேகரபட்டினம் ஏவுதள பணியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். மேலும் சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு ஜூலையில் அனுப்பப்படும். ககன்யான் சோதனை வாகனம் ஏவும் திட்டம் ஜூலை, ஆகஸ்டில் செயல்படுத்த உள்ளோம். மனிதர்கள் இல்லாத ககன்யான் வாகனம் ஏவும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ளோம் என்றும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

 

The post குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைந்து நடவடிக்கை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: