தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் என்டி ராமராவ் நூற்றாண்டு விழா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 2 நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது. கட்சியின் தலைவர் சந்திரபாபு முதலில் கட்சியின் நிறுவன தலைவர் என்டிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர்அவர் பேசியதாவது: ஆந்திராவில் அனைத்து ரூ2 ஆயிரம் நோட்டுகளும் முதல்வர் ஜெகனிடம் உள்ளன. ஏற்கனவே நான் முதன்முதலில் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர வேண்டும் என அப்போது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தேன். ஊழலை ஒழிப்பதற்கு ஏற்கனவே ரூ1000, ரூ500 ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது ரூ2000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு மட்டுமில்லாமல் 500 ரூபாயும் ரத்து செய்யப்பட வேண்டும். நாட்டில் தென்னிந்திய முதல்வர்களின் சொத்து மதிப்பில் ரூ510 கோடி சொத்து கொண்ட முதல்வராக முதல் இடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உள்ளார்.

ஆனால் மாநிலத்தில் உள்ள மக்களே ஏழ்மையில் உள்ளனர். 4 ஆண்டுகளில் ரூ10 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் ஆந்திர மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடனில் முதல் இடத்தில் உள்ளது. ரூ6000 கோடி அரசு சொத்துக்களை இந்த ஜெகன், பால் நிறுவனத்திற்கு தாரை வார்த்து உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ‘எங்களை வெற்றி பெற செய்து 25 எம்பிக்களை வழங்கினால் கட்டாயம் மத்திய அரசை தலை வணங்க வைத்து மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்படும்’ என ஜெகன்மோகன் தெரிவித்தார். தற்போது தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து தலைவணங்கி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருகிறார். பொதுத்தேர்தல் குருஷேத்திரப் போர். கவுரவர்களை தோற்கடித்து மீண்டும் ஒரு கவுரவ இல்லம் கட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: