தீபாவளிக்கு பொது விடுமுறை: அமெரிக்காவில் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமெரிக்க எம்பி மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி பண்டிகையை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் மட்டுமின்றி அந்நாட்டு மக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் தீபாவளிப்பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய அமெரிக்க எம்பியான கிரேஸ் பெங் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடும்போது தீபாவளி நாள் சட்டமாக ஆகும். மசோதா அறிமுகத்துக்கு பின் வீடியோகான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கிரேஸ் மெங் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் முக்கியமானது. தீபாவளி விடுமுறை நாள் சட்டம் தீபாவளியின் முக்கியத்துவம் பற்றி அனைத்து அமெரிக்கர்களும் தெரிந்து கொள்வதற்கும், அமெரிக்க பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்குமான ஒரு வாய்ப்பாகும்’’ என்றார்.

The post தீபாவளிக்கு பொது விடுமுறை: அமெரிக்காவில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: