ரூ.10 கூடுதலாக மது விற்கக்கூடாது: டாஸ்மாக் கடை திறப்பதில் விதிமீறல் இருக்கக் கூடாது.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு..!!

சென்னை: டாஸ்மாக், மதுக்கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுகூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக், மதுக்கூடங்கள் திறப்பில் எந்தவித விதிமீறல்கள் இருக்கக்கூடாதென தெளிவாக அறிவுறுத்தினார். டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்.பி. மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்கக் கூடாது. கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்றால் அதற்குரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும்.

மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும். ஏற்கனவே நகராட்சி, மாநகராட்சிகளில் 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.10 கூடுதலாக மது விற்கக்கூடாது: டாஸ்மாக் கடை திறப்பதில் விதிமீறல் இருக்கக் கூடாது.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: