சீரடி விமானம் ரத்தால் பயணிகள் போராட்டம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை, மே 26: சென்னையில் இருந்து சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு சீரடி புறப்பட இருந்தது. விமானத்தில் 154 பயணிகள் செல்ல இருந்தனர். இவர்கள் பகல் ஒரு மணிக்கு முன்னதாகவே, வந்து காத்திருந்தனர். ஆனால் விமானம் காலதாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. றகு விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், சீரடியில் மோசமான வானிலையால் விமானம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

கடைசி நேரத்தில் விமானம் ரத்து என்பதை, நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றனர். மேலும், சீரடியில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்போனில் விசாரித்தபோது, அங்கு வானிலை தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே, எப்படியும் விமானத்தை இயக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து, விமான நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தையடுத்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், விமான நிலைய அதிகாரிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளிடம் வந்து பேசி சமரசம் செய்தனர். அதன் பின்பு விமானம், காலதாமதமாக மாலை 6.30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்கி, பாதுகாப்பு சோதனையும் நடத்தினர்.

இந்நிலையில், மாலை 6.30 மணிக்கு புறப்படும் விமானம், இரவில் சீரடியில் சென்று தரை இறங்க முடியாது என்பதால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து நாசிக் செல்லும், அதே தனியார் பயணிகள் விமானத்acதில், அவசரமாக சீரடி செல்லும் பயணிகளை அனுப்பி வைப்பது, அங்கிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு, சாலை வழியாக வாகனத்தில் அழைத்துச் செல்வது, சென்னையில் இருந்து நேரடியாக சீரடி செல்ல விரும்பும் பயணிகள், இன்று விமானத்தில் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. தனால் பயணிகள் ஓரளவு அமைதி அடைந்தனர். இந்த சம்பவத்தால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சீரடி விமானம் ரத்தால் பயணிகள் போராட்டம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: