பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நடித்து தங்க கட்டிகள் கொள்ளை

பெரம்பலூர், மே 26: பெரம்பலூரில் நகை வாங்குவது போல் பேசி- நகைக்கடை உரிமையாளரின் கவனத் தைத் திசை திருப்பி- மூன் றேகால் பவுன் தங்கக் கட்டி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சிங்கா ரம் மகன் சின்னசாமி(64). இவர் பெரம்பலூர்-துறை யூர் சாலையில், பெரிய கடை வீதியிலுள்ள தேரடி பஸ்டாப்பில் நகைக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று(25ம்தேதி) காலை 11.30 மணியளவில் சின்ன சாமி மட்டும் கடையில் இரு ந்த பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடைக்கு வந்து நகைகளை வாங்குவது போல் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

கடைக்காரர் சின்னசாமியி டம் நிறைய நகைகளை வா ங்குவது போல், ஒவ்வொரு நகையாக எடுத்துக்காட்டும் படி கேட்டுள்ளனர். சின்ன சாமியும் வந்தவர்கள் திருட ர்கள் எனத் தெரியாமல் ஷோக்கேசிலிருந்த நகை களை ஒவ்வொன்றாக எடு த்துக் காட்டியுள்ளார். அப் போது சின்னசாமி எதிர்பா ராத நேரத்தில் நகை செய் வதற்காக அவர்கள் வைத் திருந்த தங்கக் கட்டியை நைசாக கையில் எடுத்துக் கொண்டு,பணம் கொஞ்சம் ஏடிஎம்மில் எடுத்துக் கொ ண்டு உடனே வருகிறோம் எனக்கூறி தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் போன பிறகு தான் டேபிளில் வைத்திருந்த மூன்றேகால் பவுன் தங்கக்கட்டி மாயமானது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னசாமி கொ டுத்தப் புகாரின்பேரில் பெர ம்பலூர் போலீசார் நகைக டைகளின் சிசிடிவி கேமரா காட்சிப்பதிவுகளைக் கொ ண்டுவந்து கைவரிசையை காட்டிச்சென்ற மர்மநபர்கள் யாரென விசாரித்து வருகி ன்றனர்.

The post பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நடித்து தங்க கட்டிகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: