லாரிகள் மோதி விபத்து

ஓசூர், மே 26: ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் தப்பினர். ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் முன் உள்ள மேம்பாலத்தின் மீது, கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றுக் கொண்டு கன்டெய்னர் லாரி, 2ம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு செல்ல சர்வீஸ் ரோடுக்கு திரும்பியது. அப்போது, அதே வேகத்தில் பெங்களூருவில் இருந்து மாங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற இரும்பு பாரம் ஏற்றிய லாரி மீது உரசியது. இதனால் மாங்காய் ஏற்றிச் சென்ற லாரியின் ஒரு பக்கம் உடைந்து, மாங்காய்கள் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை. இந்த விபத்தால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற அட்கோ போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரிகள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: