திருச்சி, மே 25: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.திருச்சி கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய், சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, பழம் அடங்கிய தட்டு மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
முன்னதாக, சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு 5 வகையான கலவை உணவு வழங்கப்பட்டது. விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.