டிரசினா செடி வளர்த்து அசத்தும் விவசாயி

ஓசூர், மே 25: ஓசூர் அருகே, நல்லூர் அக்ரஹாரம் பகுதியில் டிரசினா என்னும் அழகு செடி, சுமார் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த வகை செடி, முழுக்க முழுக்க மலர் அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் செடிகள் வரை வளர்க்கப்படுகிறது. பயிரிடப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை பயன் தருகிறது.

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணா கூறுகையில், ‘பத்து இலை கொண்ட கட்டு ₹25க்கு விற்கப்படுகிறது. மலருடன் டிரசினா செடியை அலங்கார தட்டுகளில் வைத்தால், மிக அழகாக இருக்கும். விரைவில் காயாத செடி என்பதால், மலர் அலங்காரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயில்களில் மலர் அலங்காரத்தில் இந்த செடியை பயன்படுத்துகின்றனர். இந்த செடிகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், இந்த செடிகள் வீடுகள், அலுவலகங்களிலும் அழகிற்காக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது,’ என்றார்.

The post டிரசினா செடி வளர்த்து அசத்தும் விவசாயி appeared first on Dinakaran.

Related Stories: