குழந்தைகளை தாக்கும் தோல்நோய் பாதிப்புகள்

சேலம், மே 24: கோடை வெயிலால் குழந்ைதகளுக்கு தோல்நோய் பாதிப்புகள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அதேபோல், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி முதல் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை விடுமறையில் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே விளையாடும்போது வெயிலின் உக்கிரத்தால் அவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது. வேர்குரு உள்ளிட்ட தோல் நோய் அதிவேகமாக தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது. அவர்களுக்கு தோல்நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகளவில் வரவாய்ப்புள்ளது. இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ வகைகள், நீராகரங்கள் போன்ற இயற்கை உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். குறிப்பாக பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக வேர்குரு பாதிப்பு, தோல் நோய் ஏற்பட்டால் உடடினயாக மருத்துவர்களை அணுக வேண்டும்,’’ என்றனர்.

The post குழந்தைகளை தாக்கும் தோல்நோய் பாதிப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: