சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வாலிபர் மீது பாய்ந்த போக்சோ

 

மணப்பாறை, மே 24: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சமுத்திரம் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபர் மணப்பாறையை சேர்ந்த பெண்ணிடம் பழக்க வழக்கத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த பெண் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் அந்த பெண்ணின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அவரது தாய் வந்த உடன் நடந்ததை கூறி உள்ளார். உடனடியாக சிறுமியின் தாயார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பந்தப்படட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வாலிபர் மீது பாய்ந்த போக்சோ appeared first on Dinakaran.

Related Stories: