கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக யு.டி.காதர் இன்று பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடக மாநில பேரவையின் 24 வது சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படும் யு.டி.காதர் இன்று பதவியேற்கிறார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக பதவியேற்றனர். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட மங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் யு. டி. காதர் நேற்று மனு செய்தார்.

பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் எதிர்கட்சி சார்பில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பதால் இன்று ஒருமனதாக தேர்வு செய்யபடுகிறார். கர்நாடகாவில் இதுவரை சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் யாரும் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக யு.டி.காதர் இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: