திருச்சி ஜிஹெச் சித்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

 

திருச்சி, மே 23: திருச்சி புத்தூரில் உள்ள ஜிஹெச் வளாகத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் இரு தினங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச சிறப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெறவுள்ளது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். முகாமில் இதய நோய், ஆஸ்துமா, மூட்டு வலிகள், சத்து குறைபாடு, கண்நோய், மலக்கட்டு, தூக்கமின்மை, வயிற்றுப்புண்கள், சா்க்கரை நோய், ரத்த சோகை, சினைப்பை நீர்க்கட்டி, சிறுநீரக கற்கள், தைராய்டு நோய், தோல் நோய்கள், மூலம் பவுத்திரம், குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, பித்தப்பை கற்கள், முடி உதிர்தல், புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் உட்பட ஆண்களுக்கு ஏற்படும் ‘பிராஸ்டேட்’ வீக்கம் (புரஸ்தகோளதாபிதம்) நோய்க்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், மார்பகக்கட்டி, கர்ப்பபை கட்டி உள்ளவா்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. உடல் தேற்றி டானிக், இருமல் மருந்து, மூட்டுவலி தைலம் போன்றவைகள் முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். முகாமைத் தொடா்ந்து தொடா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு இந்த மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை அளிக்கப்படும். ஆங்கில மருந்துகள் எடுத்து கொண்டிருப்பவா்களும், இஎஸ்ஐ மருத்துவமனை பயனாளிகளும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி ஜிஹெச் சித்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: