கலெக்டர் அழைப்பு கள்ளச்சாராயம் விற்றால் புகார் தெரிவிக்கலாம்

 

திருச்சி, மே 23: திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட எஸ்பி சுஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் கஞ்சா பயிரிடுதல், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல்களை 76598 83212, கட்டணமில்லா தொலைபேசி 10581 என்ற எண்ணுக்கும் தெரிவிக்கலாம். தகவல் தரும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

The post கலெக்டர் அழைப்பு கள்ளச்சாராயம் விற்றால் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: