நலிவுற்றோர் பயன்படுத்தும்படி மறுபயன்பாடு மறுசுழற்சி திட்டம்

 

பொன்னமராவதி, மே 23: பொன்னமராவதி பேரூராட்சியில் இயலாதவர்கள், நலிவுற்றோர் பயன்படுத்தும் வகையில் மறுபயன்பாடு மறுசுழற்சி திட்டம். தொடங்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் மறுபயன்பாடு மறுசுழற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கப்பட்ட மறுபயன்பாடு மறுசுழற்சி திட்டத்தின் கீழ் பொது மக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய ஜோடி காலணிகள் போன்றவை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் வைக்க வேண்டும் என்றும். அதனை மறுபயன்பாடு மறுசுழற்சியின் கீழ் இயலாதவர்கள், நலிவடைந்தோர் பயன்படுத்த உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலரகணேசன், துணைத்தலைவர் வெங்கடேசன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நலிவுற்றோர் பயன்படுத்தும்படி மறுபயன்பாடு மறுசுழற்சி திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: