பிஎம் கிசான் திட்டம் 14வது தவணை தொகை பெற ஆதார் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

 

பெரம்பலூர்,மே23: பி.எம். கிசான் திட்டம் 14-வது தவ ணைத் தொகையை தொட ர்ந்து பெற ஆதார் விவரங் களை வலைதளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் கற்பகம் ெதரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தி ருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் 14-வது தவ ணைத்தொகையை தொடர் ந்து பெற தங்களது ஆதார் விவரங்களை (e-KYC) பி. எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண் டும். பி.எம்.கிசான் திட்டத் தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைக ளில் ரூ 2000 வீதம் மொத்த மாக ரூ6000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தவ ணைகள்விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

14-வது தவணை பி.எம்.கிசான் திட் டப்பலனை பெற விவசாயி கள் தங்களதுஆதார் விவர ங்களை மே 25-ஆம் தேதிக் குள் பி.எம்.கிசான் வலைத ளத்தில் பதிவேற்றம் செய் ய வேண்டும். பதிவேற்றம் செய்யத் தவறிய விவசாயி களுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந் து வரும் தவணைகள் வழ ங்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆ தார் விவரங்களை பதிவே ற்றம்செய்யஅருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்க ளை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட கேட் டுக்கொள்ளப் படுகிறது. இதுவரை பெரம்பலூர் மாவ ட்டத்தில் 7,070 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்க ளை பதிவேற்றம் செய்யா மல் உள்ளனர். எனவே பதி வேற்றம் செய்யாதவர்கள் மே 25-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கே ட்டுக் கொண்டுள்ளார்.

The post பிஎம் கிசான் திட்டம் 14வது தவணை தொகை பெற ஆதார் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: