புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி குப்பைக்கிடங்கில் ரூ.6.63 கோடியில் கசடு கழிவு மையம் அமைக்க பூமி பூஜை

 

சத்தியமங்கலம், மே 23: புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா நகர் பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.6.63 கோடி செலவில் கசடு கழிவு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

நகர கழக செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.ஏ. சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கமிஷனர் செய்யது உசேன், கவுன்சிலர்கள் பூரண ராமச்சந்திரன், சிவசண்முகம், சதீஷ், வெங்கடாசலம், துரைசாமி, பரிமளம், தனலட்சுமி, சரோஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி குப்பைக்கிடங்கில் ரூ.6.63 கோடியில் கசடு கழிவு மையம் அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: