முதலை நெக்லஸால் கிண்டலுக்கு ஆளான நடிகை: நெக்லசின் மதிப்பு என்ன தெரியுமா?: ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்..

மும்பை: கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலை வடிவ நெக்லஸ் அணிந்திருந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் அந்த நெக்லசின் மதிப்பு என்ன தெரியுமா? என்று அவர் கொந்தளித்துள்ளார். நடிகையும் மடல் அழகியுமான ஊர்வசி ரவுத்தேலா ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான திலெஜெண்ட் திரைப்படத்தில் டாக்டர் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாள் தோறும் வித்தியாசமான உடைகளில் தோன்றி அசத்தினார். விழாவின் முதல் நாளில் பிங்க் நிற ஆடையில் தோன்றிய அவர் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன முதலை வடிவ நெக்லஸ் அணிந்திருந்தார். முதலைவடிவ நெக்லஸ் அணிந்து விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார்.

விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர் அந்த நெக்லசின் மதிப்பு இருக்கும் தெரியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். பிரபல இத்தாலியன் நடிகையான மோனிகா பெலூஸி அந்த முதலை வடிவ நெக்லஸை கேன்ஸ் விழாவில் இரண்டு முறை அணிந்திருந்ததாகவும் அதனை ஒரு செண்டிமெண்ட் ஆக எண்ணி தானும் அணிந்ததாக ஊர்வசி ரவுத்தேலா விளக்கமளித்துள்ளார். இதனிடையே அந்த நெக்லசின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

The post முதலை நெக்லஸால் கிண்டலுக்கு ஆளான நடிகை: நெக்லசின் மதிப்பு என்ன தெரியுமா?: ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்.. appeared first on Dinakaran.

Related Stories: